
இந்தியா, ஏப் 8
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையினை தவிர்க்கும் வகையில், தமிழ் மக்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தமிழக முதலமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு தானியம் மற்றும் ஏனைய மருந்துகளை தூத்துக்குடியில் இருந்து கப்பல் ஊடாக இலங்கைக்கு அனுப்பிவைக்க முடியுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்த போதும் இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.