
கொழும்பு, ஏப் 8
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக எங்களுக்கு கோட்டா வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதையும் காணமுடிகிறது.
நாட்டில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் நிலையில், புதிதாக ஜனாதிபதிக்கு ஆதரவாக பேரணி இடம்பெற்றுள்ளது வியப்பாகவே உள்ளது.