
பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொரளை, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேவேளை, கொழும்பு – சுதந்திர சதுக்கத்தில் இளைஞர்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சார்பாக தாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், கொட்டும் மழையிலும் வீதியில் இறங்கி பொழுதுபோக்குக்காக போராடவில்லை எனவும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்