நாட்டை சிதைத்த தரங்கெட்ட அரசாங்கத்திற்கெதிராக புத்தளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் கண்டித்தும், ராஜபக்ஷ அரசு பதவியை விட்டு விலக வேண்டுமென்று தெரிவித்தும் இன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில், இன மத பேதமின்றி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்திஜீவிகள் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னால் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கொடும்பாவிகளும் காணப்பட்டன.
இதன்போது, கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொலிஸ் தலைமையகத்தினால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

