
அரசாங்கம் தனக்குச் சார்பான ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தியுள்ளது.
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கும் குறைவான ஆர்ப்பாட்டக்காரர்களை இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
நாங்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணி நடத்தினர் கொழும்பில் இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
தேசியக்கொடிகளை ஏந்தியவாறு ‘கோத்தபாய எங்களுக்கு வேண்டும் நாங்கள் எப்போதும் உங்களுடன்’ என்ற கோஷங்களை எழுப்பியவாறு இவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
அவர்கள் கூறுகையில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் சென்ற இவர்கள் நாங்கள் இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவிக்கு கொண்டுவர பாடுபட்ட அதைப்போன்று இந்த ஆட்சியை பாதுகாக்கவும் பாடுபடுவோம் என்று கூறினார்.
இருப்பினும் இந்த ஆர்ப்பாட்டம் உப்புச் சப்பு இல்லாமல் போய்விட்டது