கொழும்பில் எதற்கும் தயார் நிலையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சிப்பதைத் தடுப்பதற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இருந்து விசேட பொலிஸ் குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை பற்றி பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால், பலாத்காரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவோம் என்றும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *