கல்லடி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற தம்பபண்ணி கடற்படைக்குச் சொந்தமான லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி உள்ளது.
இந்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி மற்றுமொறு முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து, புத்தளம் பகுதியிலிருந்து கல்லடி நோக்கிச் சென்ற டைடோ ரக வாகனமொன்றுடனும் குறித்த லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து புத்தளம் இரண்டாம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும், டைடோ ரக வாகனத்தின் சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு முச்சக்கர வண்டியின் சாரதியின் கை உடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான ஒருவர் தில்லையடி பகுதியைச் சேர்ந்தவரும், இருவர் புத்தளம் 2ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது லொறியை செலுத்தி வந்த கடற்படை சிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



