
கொழும்பு, ஏப் 9
கொழும்பு, கரையோரப்பகுதி இராமநாதன் வீடமைப்பு தொகுதிக்கு அருகில் துப்பாக்கி ஒன்றை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால், சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து தானியங்கி துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு ஜம்பட்டா வீதிப் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர், இதற்கு முன்னர், 16 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன், மருதானை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.