கொழும்பு, ஏப் 9
இலங்கைக்கான சீனத் தூதரகம் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையுடன் இணைந்து குறைந்த வருமானம் பெறும் சுமார் 10,000 குடும்பங்களுக்கு தலா 5,000 பெறுமதியான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை 16 இலங்கை அரசியல் கட்சிகள் மூலம் வழங்கியுள்ளது.
இதேவேளை இந்த இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்க முன்வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
