வவுனியா, ஏப் 10
சதொசவில் 1950 ரூபா பெறுமதியில் அரிசி, சீனி, பால்மா பற்கற், தேயிலைப்பக்கற் போன்ற பொருட்கள் வழங்கப்படுவதாக மக்களுக்கு கிடைத்த தகவலை மக்கள் வரிசை ஏற்ப்பட்டிருந்து.
யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் அதிகளவிலான மக்கள் வரிலசயில் நிற்பதனை காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் வவுனியாவில் சுமார் 100 பேர் வரையில் வயோதிபர்கள் கைக்குழந்தைகளுடன் தாய்மார் என பலரும் காத்திருந்த நிலையில் பொருட்கள் வழங்குவதற்கு தமது கணனியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் பொருட்களை வழங்க முடியாதுள்ளதாகவும் ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதனால் காத்திருந்த மக்கள் முரண்பட தொடங்கிய நிலையில் பொலிஸார் வருகை தந்து பொருட்களை வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு சதொச ஊழியர்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
