
பேருவளை, ஏப் 10
பேருவளை, பெந்தோட்டை சுற்றுலா பிரதேசங்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சைக்கிள்களை பயன்படுத்தி இடங்களை சுற்றி பார்த்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் பல கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஆறுகள், பறவைகள் சரணாலயம், நீர் வாழ் உயிரினங்களை பார்வையிட சைக்கிள்களில் பயணித்து வருகின்றனர்.
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் போல் போக்குவரத்துக்கு தேவையான கார்கள், முச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகள் சைக்கிள்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக சுற்றுலா வழிக்காட்டிகள் தெரிவித்துள்ளனர்.