காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்றலில் இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் ஒன்றினைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் சற்முன் வெளியிட்ட ருவிட்டர் பதிவில்.
“‘எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமைக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் படிகள் வரை வந்து எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் நிறுத்தப்படுவதில்லை. இடத்தில் ஜனநாயகம்! #இலங்கை’” என்றவாறு பதிவிடப்பட்டுள்ளது.
