5,000 ரூபா தருவதாக சொன்னார்கள் – கோட்டா ஆதரவு பேரணியில் கலந்து கொண்டோம்! – அம்பலமான தகவல்

ஜனாதிபதிக்கு ஆதரவான பேரணியில் கலந்து கொள்வதற்கு ரூ.5,000 தந்தார்கள். அதனால் ‘கோட்டா எமக்கு வேண்டும்’ என கோசமிட்டு பேரணியில் கலந்து கொண்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்ட ஒருவர் அசால்ட்டாக கூறியுள்ளார்.

சில நாட்களின் முன்னர் கொழும்பில் சிறிய குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபயவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டது.

அந்த பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் சிங்கள ஊடகமொன்றிற்கு இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில்,

நாம் குப்பை சேகரிப்பவர்கள். கோட்டாபய ஆதரவு பேரணிக்கு அழைத்தார்கள். 5,000 ரூபா பணம், உணவு தருவதாக சொன்னார்கள். எங்களிற்கு முஸ்லிம்களை போல தொப்பி அணிவித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *