கொழும்பு, ஏப் 10
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்துண்டிப்புக்கு மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை மின்வெட்டு இடம்பெறும் வலயங்களுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் வரும் புத்தாண்டை முன்னிட்டு 13,14 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பு அமல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
