
கொழும்பு, ஏப் 10
நாட்டில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில், பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும் இடிமின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.