
காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இரண்டாவது நாளாக தற்போது வரை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு இன மத வயது வேறுபாடின்றி அனைவரும் ஒன்றினைந்து கோட்டா கோ ஹோம் என்றவாறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் அதன் இலக்கு அடையும் வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு ஏராளமானோர் தற்போது வருகைதந்து கொண்டு இருப்பதோடு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வேண்டிய குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களை பல்வேறு சமூக அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.