
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய 20வது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட ஐக்கியமக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் 20வது திருத்தத்தை நீக்குவதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை தொடர்வதற்கு தீர்மானித்ததுஇ இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஆதரவை பெற தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.