
கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நூதன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சுண்ணாகத்தை சேர்ந்த 25 வயது குடும்ப பெண், தெல்லிப்பழை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குப்பிளான் பகுதியில் திருட்டு முயற்சியின் போதே, இவ்வாறு அவர் செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கொட்டகச்சி தலைமையிலான காங்கேசந்துறை விசேட புலனாய்வு பிரிவின் எஸ்.நிதர்சன் தலைமையிலான குழுவே இக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது வெளிநாட்டு பணங்களும் மற்றும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.