
கொழும்பு, ஏப் 11
அரசியல் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டிலுள்ள இளைஞர்கள் குழுவுடன் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள இளைஞர்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்றும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதமர், இது அரசியல் அல்லது வேறு சக்திகளின் கீழ் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.