
யாழ்ப்பாணம், ஏப் 11
யாழ்.சுன்னாகம் சதொசாவில் ரூ. 1950 அடங்கிய பொதிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக முகாமையாளர் குறிப்பிடுகின்றனர்.
எனினும் அரிசி ரூ.100 க்கும் கீரிச்சம்பா ரூ.130 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அங்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அங்குள்ள ஏதேனும் பைக்கற் பொருட்களை கொள்வனவு செய்தால் மட்டுமே அரிசி, பருப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர சதொசாவில் பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அளௌகரியங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.