
கொழும்பு, ஏப் 11
ரம்புக்கன ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் ரயில் மீது பயணிகளை ஏற்றிவந்த மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் ரயிலில் இருந்த பாரியளவிலான டீசல் கசிந்துள்ளது. பேராதனைக்குக் கொண்டு செல்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் தாங்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.