சத்திரசந்தியில் கோர விபத்து

யாழ்ப்பாணம்- சத்திர சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பயணித்த சிறுவன் , வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்துக்குள் சிக்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாண பொலிஸார் , சம்பவ இடத்துக்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *