
கொழும்பு, ஏப் 11
அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலை காரணமாக அமைச்சுப் பதவிகளில் இருந்த அனைவரும் பதவி விலகியதை அடுத்து இலங்கை அரசாங்கம் ஸ்திரமற்ற தன்மையில் உள்ளது.
இந்த நிலையில் கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி மக்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
அரசியல் பிரச்சினைகள், டொலர் பிரச்சினை, பொருட்களின் விலையேற்றம், மக்களின் தொடர்ச்சியான போராட்டம், எரிபொருட்கள் தட்டுப்பாடு, மின்சாரமின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் பிரதமரை பதவி விலகுமாறு கோரி சுயாதீனமாக செயற்படும் அமைச்சர்களினூடான நேற்றைய சந்திப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதனை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.
எனவே, இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கும் உரை மிக முக்கியமா விடயங்கள் அடங்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.