
ரசாயன உரத்தை தடை செய்வதற்கான நேரம் இதுவல்ல. எனவே உர மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் அவர் மக்களுக்கு விடுத்த கோரிக்கையின் போது பொறுமையாக இருக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பு உரை இதையே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மற்றும் அரசின் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.