
கொழும்பு, ஏப் 12
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ), எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதுடன் தொடர்ந்து 3 தினங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக, கலன்கள் மற்றும் பீப்பாய்களில் டீசல், பெற்றோல் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.