
சர்வதேச காணாமல் போனோர் அமைப்பு International Commission on Missing Persons (ICMP)தமது பணிகளை ஆரம்பிப்பதற்காக எதிர்வரும் வாரத்தில் உக்ரைன் பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி அமைப்பின் தலைவர் Kathryne Bomberger, கருத்து தெரிவிக்கும் போது உக்ரைன் போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாக எமக்கு முறைப்படு கிடைக்கப் பெற்றுள்ளது இவர்கள் கடத்தப்பட்டுள்ளார்களா அல்லது கொல்லப்பட்டுள்ளார்களா அல்லது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது பற்றிய சுயாதீன மற்றும் பக்க சார்பற்ற தேடுதல் மற்றும் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளும் பணிகள் அடுத்த வாரத்தில் இருந்து உக்ரைனில் ஆரம்பிக்கப்படும்.
இப் பணிகள் மிகவும் கடினமானது. உயிர் ஆபத்து நிறைந்த பணிகள் இதற்கான ஆதாரங்களை சேமித்தல் மற்றும் இறுதியில் எம்மால் உறுதிப்படுத்தப்படும் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கொண்டு சென்று நிறுத்துவது வரை மிகவும் வேதனையான பணிகள் என அவர் மேலும் தெரிவித்தார்.