
உண்டியல் வர்த்தகத்தின் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் உள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச பேட்டி ஒன்றில் தான் சட்டவிரோத நிதிச் சந்தையில் இருந்து டொலர்களை பெற்றதாக கூறினார். உலகில் எந்த அரசாங்கமும் சட்டவிரோத நிதி சந்தையில் பணத்தை பெறாது என்பதுடன் அதனை ஊக்குவிக்காது.
உண்டியல் முறையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே அவர் பேசினார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உண்டியல் பணப் பரிமாற்றும் வர்த்தம் தொடர்பாக தளர்வான கொள்கையையே கடைப்பிடித்தார்.
ஒன்றரை பில்லியன் டொலர்களே உண்டியல் பணப் பரிமாற்று வர்த்தகத்தில் புழங்குவதாக அஜித் நிவாட் கப்ரால் கூறினார். அது உண்மையல்ல, இதற்கு முன்னரும் வெளிநாடுகளில் தொழில் புரிவோரில் சுமார் 40 வீதமானோர் சட்டவிரோதமான பணப் பரிமாற்று முறை ஊடாகவே பணத்தை அனுப்பினர்.
நெருக்கடி இல்லாத காலத்திலும் உண்டியல் முறை ஊடாக நாட்டுக்கு பணம் வந்தது என்பது உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகத்துடன் ராஜபக்ச குடும்பமும், அவர்களின் நெருங்கிய நண்பர்களின் வலையமப்பும் சம்பந்தப்பட்டுள்ளது.- என்றார்.