
மக்களின் போராட்டத்தை நிறுத்த, திசைதிருப்ப தற்போது அரசாங்கத்தினால் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தில் குப்பை பொறுக்கின்ற சில சூழ்ச்சியாளர்கள் தற்போது வெளி வந்துள்ளனர் எனவே நாங்கள் மக்களிடம் கூறுவது சிங்கள பௌத்தர்கள் என்று கூறி அரசாங்கத்திற்கு வந்தவர்களிடம் மீண்டும் ஏமாற வேண்டாம்.
இவ் இளைஞர்கள் இப் போராட்டத்திற்கு வந்தது சாதி மத பேதமின்றி இப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வர்ணங்கள் தீட்டி வரைபடம் வரைந்து கோடாபய ராஜபக்ஷ அவர்களை பலப்படுத்தியது.
ஆனால் இன்று அவர்களே இன்று ஜனாதிபதி வெளியேற கூறியது நாட்டில் கொள்ளையடித்த பணத்தை திருப்பி தர கூறுவது மக்களிற்கு ஏற்பட்ட அநிதிக்கு நியாயம் கேற்பது ராஜபக்ஷ குடும்பத்தினரிற்கு தேவைப்பட்டது நாட்டை வல்லரசாகுவதற்கு அல்ல தம்முடைய பெறுமையை நியாயம் காட்ட மட்டுமே.
எனவே கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பெசில் ராஜபக்ஷ அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நாட்டிற்காக பயன்படுத்துங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக
நேற்று பிரதமர் என்ன கூறினார் எங்கே மக்களை தெளிவுபடுத்த வேண்டியது ஜனாதிபதி அவர்கள் ஆனால் அவர் இல்லை.
இன்னும் அவ் பழைய புராணத்தைபாடமால் இவ் இரண்டு வருட காலத்தில் என்ன செய்தார்கள் என்று கூறுங்கள்.
எனவே இவ் திருடர்களை வெளியேற்றுவது முக்கிய கூறிக்கோள் என மேலும் தெரிவித்தார்.