
எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவையை நியமிப்பதற்குரிய நடவடிக்கையில் அரச தரப்பு தற்போது இறங்கியுள்ளது.
புதிய அமைச்சரவைக்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதேவேளை புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்குமாறு ஜீவன் தொண்டமானுக்கு அரச தரப்பில் இருந்து தூதனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அரச தரப்பின் குறித்த அழைப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.