
நகைச்சுவை நடிகர் வடிவேலுவை தெரியாதவர்களே இன்று இல்லை. மனிதர் தமிழ் காமெடி நடிகர் தான் என்றாலும், நேசமணி காமெடியை மொழி கடந்து அனைவருமே ரசித்ததே அதற்கு உதாரணம்.
அந்த அளவிற்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு தான் தமிழர்களின் டென்சன் ரிலீப். வடிவேலுவை வெள்ளித்திரையில் நாம் பார்த்து சிலகாலம் ஆகிறது.
ஆனாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் இதய சிம்மாசனத்தில் இருக்கிறார் வடிவேலு. இன்றும்கூட வடிவேலு நகைச்சுவையைப் பார்த்துவிட்டுத்தான் தூங்கும் மனிதர்கள் ஏராளம்.
அதுமட்டுமல்ல வடிவேலு சார்ந்து வரும் மீம்ஸ்களும் சோசியல் மீடியாக்களில் செம ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு நடிக்க விழுந்த ரெட் கார்டை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் தலைநகரம் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர்’ என்னும் படத்தில் நடிக்கிறார் வடிவேலு. லைகா நிறுவனம் வடிவேலுவை வைத்து 5 படங்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
நடிகர் ராஜ்கிரண் மூலமாகத்தான் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகம் ஆனார் வடிவேலு. இம்சை அரசன், எலி என ஹீரோவாகவும் வடிவேலு ஒரு கலக்கு கலக்கிவிட்டார். இதுவரை நாம் வடிவேலுவைத்தான் பாத்திருக்கிறோம்.
முதன் முதலாக அவரது சகோதரர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அச்சு, அசலாக அவர் வடிவேலுவையே உரித்து வைத்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே வடிவேலு போலவே இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.