பிரதமர் தனது உரையில் தீர்வைத் தரவில்லை: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

கொழும்பு, ஏப் 13

பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை என ஜேவிபியின் உறுப்பினர் விஜிதஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேறு பலவிடயங்களை தெரிவித்து நாட்டில் தற்போது காணப்படும் உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு பிரதமர் முயற்சி செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது உரையின் மூலம் நாட்டிற்கு தீர்வை முன்வைப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் 60 வருடகால அரசியல் அனுபவமுள்ளதாக தம்பட்டம் அடிக்கும் பிரதமர் எந்த தீர்வையும் முன்வைக்க தவறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மாகாணசபை உறுப்பினர் போன்று உரையாற்றியுள்ளமை துரதிஸ்டவசமானது பிரதமர் முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தினார் என விஜிதஹேரத் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் உரையில் மூன்று விடயங்கள் மாத்திரம் இடம்பெற்றிருந்தன -30 வருட மோதல் -கொவிட் பெருந்தொற்று – 88-89 ம் ஆண்டு வன்முறையே அவை என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகிவிட்டது – 88-89 இல் காணப்பட்ட விடயங்கள் தற்போதும் காணப்படுகின்றன என பிரதமர் தெரிவித்துள்ளார். மின்வெட்டு அத்தியாவசிய பற்றாக்குறைகள் 30 வருட யுத்தகாலத்தில் கூட காணப்படவில்லை.

அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற முடிவுகளால் மக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *