அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
எனினும், முதலில் சிறை அதிகாரிகள் அவரை சிறைக்குள் அனுமதிக்கவில்லை எனவும், சபாநாயகரின் உத்தரவுக்கமைய அவர் சிறையினுள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார் என்றும் கூறப்படுகின்றது.