காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் தினம்தினம் பல்வேறு சுவாரசியங்களுடன் கூடியதாக நடைபெற்றுவருகின்றது.
ஒருபுறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவரும் நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வளாகம் கோட்டா கோ கம என பெயரிடப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் பல்வேறு வசதிவாய்ப்புக்களையும் கொண்டு விளங்குகின்றது.
இந் நிலையில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டக் காரர்களால் உருவாக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவுக்கென பிரத்தியோக இணையதளமும் உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இணையதளத்தில் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் என பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி- https://gohomegota.online/https://gohomegota.online/
