நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையைக் கருத்தில்கொண்டு, நீர் வழங்கல் திட்ட பயனாளிகளுக்கான மாதாந்த நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் நீர்ப் பட்டியல் நிலுவைகளை இலகுவில் செலுத்துவதற்கான நடமாடும் சேவை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் இம்மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நெடுங்கேணி, ஓட்டுசுட்டான், பாண்டியன்குளம், மற்றும் மல்லாவி நீர் வழங்கல் திட்ட பயனாளிகளுக்கான ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 _ 12.30 மணிவரை நெடுங்கேணி பகுதியிலும், பிற்பகல் 01.00 – 04.00 மணி வரை ஓட்டுசுட்டான் பகுதியிலும் இடம்பெறும்.
மேலும், 21 ஆம் திகதி காலை 09.00 _ 12.30 மணிவரை பாண்டியன்குளம் பகுதியிலும், பிற்பகல் ஒரு மணிமுதல் பிற்பகல் 01.00 – 04.00 மணி வரை மல்லாவி பகுதியிலும் இடம்பெறும்.
எனவே, பயனாளிகள் தங்களது மாதாந்த நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் நீர்ப் பட்டியல் நிலுவைகளை தங்கள் பகுதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திலோ அல்லது எமது உத்தியோகத்தர்களுக்கோ அழைப்பை மேற்கொள்ளவதன்மூலம் பொருத்தமான வழிமுறைகளினூடாக மேற்கொள்ளமுடியும்.
மேலும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தொலைபேசி மூலமான https://ebis.waterboard.lk/smartzone/Tamil/OnlinePayments என்ற ஒன்லைன் மூலமாகவும் தங்களது கொடுப்பனவுகளை இலகுவில் மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது