ரஷியாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்த ஐரோப்பிய நாடுகள் திட்டம்: புதின் எச்சரிக்கை

மாஸ்கோ, ஏப் 14

உக்ரைன் மீது  ரஷியா போர் தொடுத்ததால், ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபம் அடைந்துள்ளன. ரஷியா, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் இந்த நாடுகள், உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தில்  ரஷியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாடு மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த புதின் கூறுகையில்,

ரஷிய எரிவாயுவுக்கு பதிலாக மாற்று வழிகளை முயற்சிக்கும் ஐரோப்பிய நாட்டிற்கு கடும் வேதனை ஏற்படும். ஐரோப்பாவுக்கு தற்போதை நியாயமான மாற்றும் எதுவும் இல்லை.

ஐரோப்பாவுக்கு பிற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்து அமெரிக்காவில் இருந்து எரிவாயு அனுப்பப்பட்டால், அது நுகர்வோர்களுக்கு கடுமையான விலையேற்றத்தை கொடுக்கும். இதனால், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படும். ஐரோப்பிய பொருளாதாரத்தில் போட்டித்தன்மை பாதிக்கும் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *