
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அதிகாலை நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றார்.
இந்த நிலையில், நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மோகன் பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக அவரை் வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் தலைமையில், செப்டம்பர் 21ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




