ஷாங்காய் நகரில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

பீஜிங், ஏப் 15

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த நகரின் அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும்.

முக்கிய வா்த்தக நகரான ஷாங்காயில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வருவதையடுத்து, அங்கு 2 வாரங்களுக்கு மேல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *