ரஞ்சனுக்காக புத்தாண்டு இனிப்புக்களுடன் சிறைக்கு சென்ற சஜித் அணி!

புத்தாண்டு பலகாரங்களுடன் சிறைக்கு சென்ற சஜித் அணியினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்டு வழங்கியுள்ளனர்.

தமிழ் – சிங்கள புத்தாண்டு நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ்ய நாணயக்கார புத்தாண்டு இனிப்புக்களுடன் சிறையிலுள்ள ரஞ்சனை பார்க்கச் சென்றுள்ளனர்.

சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்டு புத்தாண்டு இனிப்புகளை வழங்கி உரையாடிவிட்டு வெளியே வந்த ஹரீன், மனுஷ்ய ஆகியோர் ரஞ்சனுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை என கருத்து தெரிவித்திருந்தனர்.

நீதித்துறையை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *