இலங்கையில் உள்ள யுகதனவ் மின் நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நியூபெட்ரோஸ் என்ற நிறுவனத்திற்கு பங்குகளை மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கான திட்ட வரைபு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கு வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
இதனை தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் அமைச்சரவை அனுமதி வழங்கிய இந்த பத்திரம் சேர்க்கப்படவில்லை என்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு அமைச்சர்களுக்கு இந்த பத்திரம் விநியோகிக்கப்படவில்லை என்பதனாலும் மேல் குறிப்பிட்ட அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்த திடத்தினூடு மின் நிலையத்தின் கருவூல பங்குகளில் நாற்பது சதவிகிதம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதனால் இலங்கைக்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





