20-30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் வருகின்ற 21ஆம் திகதி தடுப்பூசி-வெளியானது விபரம்..!

கொவிட் 19 தடுப்பு தேசிய செயலணி திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தேற்றல் செயல்படானது 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்ப ட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி செவ்வாய் கிழமை முதல் வழங்கப்பட உள்ளது என வடமாகான சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேலும் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதாரவைத்திய அதிகாரியினால் வெளியிடப்படும் அவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.

அத்துடன் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை அல்லது உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது .

யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை,பருத்தித்துறை,சாவக்கச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும்செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 2ம் ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள்
செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *