படங்கள் சீரியல்கள் என நடித்து புகழ்பெற்ற நடிகை குஷ்பு தற்போதும் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருவதுடன், அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.
இதனிடையே, குஷ்பு சில வாரங்களுக்கு முன்பு தனது அற்புதமான உடல் மாற்றத்தின் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.

தனது உடல் எடையில் 14 கிலோவைக் குறைத்து தற்போதைய இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு செம அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கிறார்.

தற்போது இவர் கலர் தமிழ் தொலைக்காட்சியில் இந்த மாதம் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-வில் நடுவராக பங்கேற்கிறார். அவருடன் தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் பிருந்தா கோபாலும் நடுவராக இருக்க போகிறார்.

குறித்த ரியாலிட்டி ஷோவை காண மிக ஆவலுடன் இருக்கும் நடிகை, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியின் தொகுப்புகளில் இருந்து எடுத்துக்கொண்ட சில போட்டோக்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது சுடிதார் அணிந்து அட்டகாசமான அழகுடன் காணப்படுகின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் குஷ்புவின் அழகினைக் கண்டு பொறாமை கொண்டுள்ளனர்.




