தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மதுபான சாலைகளை திறக்க அனுமதி வழங்கியமைக்கு எதிராக இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கூட்டம் கூட்டமாக மதுப் பிரியர்கள் மதுபானங்களை முன் வரிசையில் நின்று கொள்வனவு செய்தனர்.
கொரோனாத் தொற்றுக் காலத்தில் மதுபான சாலைகள் திறந்துள்ளமைக்கு பலரும் அதிருப்தி வௌியிட்டனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் செய்த நபர்களை பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளமையால் ஆர்ப்பாட்டம் செய்யத் தடை எனக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், பொலிஸாரை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.





