கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி: ஹைதராபாத் அணி 7 விக்கெட்களால் வெற்றி

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா அணி சார்பாக நிதிஷ் ராணா 54 ஓட்டங்களையும் அண்ட்ரே ரஸ்ஸல் அட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 176 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக ராகுல் திரிபாதி 71ஓட்டங்களையும் ஏடன் மார்க்ரம் அட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *