சம்பள முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் மடல்!

சம்பள முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் மடல்!

கௌரவமிக்க மதத் தலைவர்களே,
மதிப்புமிக்க பெரியோர்களே, ஐயா, அம்மணி,
ஆசிரியர் அதிபர் சேவையில் 24 வருடங்களாக நிலவி வரும் சம்பள முரண்பாட்டை நீக்காமைக்கு எதிராக மேற்கொள்ளும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக.
நாட்டின் எதிர்கால நலனுக்காக 43 இலட்ச மாணவர்களின் கற்றல் நடவடிக்கையில் முதன்மை பொறுப்பை வகிக்கும் ஆசிரியர் அதிபர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் ஆகிய நாம் மேற்குறிப்பிட்டதற்கமைய மேலும் பல விடயங்களை தங்களின்; கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

1994 இல் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் அகில இலங்கை சேவைகளில் சம்பள கட்டமைப்புகளை வழங்கி அதற்கமைய ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் அதிபர் சேவைகளுக்கு இந்நாட்டில் உயர்கல்வி கற்ற திறமையான அறிவுசார்ந்த பெரும்பாலானோர் இணைந்து கொண்டனர். இதன்மூலம் இந்நாட்டு கல்வித்துறை பெரும் எழுச்சியைப் பெற்றதை அவதானிக்க முடிந்தது.

ஆனால் அதிலிருந்து 03 வருடங்களுக்கு பின்பு 1997 இல் பீ.சீ. பெரேரா சம்பள ஆணைக்குழுவின் கட்டளையின் கீழ் வெளியிடப்பட்ட 2ஃ97(iii) அரச நிர்வாக சுற்றறிக்கையின் 3:10 சரத்தினூடாக எமது சேவையில் நிலவிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டது. ஆனால் அதிபர் – ஆசிரியர் சேவை தவிர்ந்த ஏனைய அரச துறைகளுக்கு இச்சுற்றறிக்கையின் பிரகாரம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது 24 ஆண்டுகள் கடந்திருந்தாலும் ஆட்சியில் பதவியேற்ற எந்தவொரு அரசாங்கமும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை இந்நாட்டு கல்வித்துறையை பாரியளவில் சீரழித்து சரிவினை நோக்கித் தள்ளுவதற்கு காரணமாகியுள்ளது.

இக்காரணத்தினால் இன்று ஆசிரியர் மற்றும் அதிபர்களுடைய மாதாந்த அடிப்படை சம்பளத்தை உற்றுநோக்கும் போது இன்று அவர்கள் பெற்றுக்கொள்ளும் தொகைக்கு சமனான தொகையை கடந்த 24 வருடங்களாக இழந்து வந்துள்ளனர். எனினும் அதனால் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகள், பாதிப்புக்களையும் சகித்துக்கொண்டு கடந்த 24 வருடகாலமாக மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தாலும் அப்பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாமை மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது.

மேலும் அரச துறையில் உயர்மட்ட கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளைப் பெற்றவர்களும் சிலநேரம் மிக உயர் தகைமைகளைப் பெற்றவர்களும் இத்துறையில் மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்று சேவையாற்றி வருவதோடு அவ்வாறு உயர் தகமைகளைப் பெற்றவர்கள் இன்று அவர்கள் இச்சம்பள மு ரண்பாடு காரணமாக இத்துறையில் இணைவதற்கு விரும்பாமல், வேறு தொழிற்துறைகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக செயற்படுவதையும் காணமுடிகிறது. இது இந்நாட்டின் கல்வித்துறையின் உயர் பண்பின் சீரழிவுக்கும் காரணமாக அமைகிறது.
அதனால் மாறி மாறி பதவிக்கும் வரும் அரசாங்கங்களினால், குறிப்பாக ஒரு நாட்டின் கல்வித் துறையில் பெரும் மதிப்பு மிக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருந்தாலும், இவ்விடயம் தொடர்பில் இவ்வாறான ஆட்சியாளர்கள் செயற்படாததினால், நாம் விரும்பாவிட்டாலும் எமது சம்பளத்திற்காகப் போராடும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
நன்றி!
இங்ஙனம்

மஹிந்த ஜயசிங்க ஜோசப் ஸ்டாலின்
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இலங்கை ஆசிரியர் சங்கம்

யல்வெல பஞ்ஞா சேகர ஹிமி சுனில் பிரேம திலக
அகில இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம் அதிபர் சேவை சங்கம்

மொஹான் பராக்கிரம வீரசிங்க ஜகத் ஆனந்த சில்வா
இ.தே.அதி.ச. சுயாதீன கல்வி சேவை சங்கம்

அமில சந்தருவான் மயூர சேனாநாயக்கா
ஓன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கம்

மீகா ஹந்துரே சீலானந்த ஹிமி
இ.பிரி.ஆ.சே.ச.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
இலங்கை ஆசிரியர் சங்கம்
அகில இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம்
இலங்கை தேசிய அதிபர் சங்கம்
ஓன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம்
இலங்கை பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கம்
அதிபர் சேவை சங்கம்
சுயாதீன கல்வி சேவை சங்கம்
இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கம்
தரப்படுத்தப்பட்ட ஆசிரியர் சேவை ஒன்றியம்
தேசிய அதிபர் ஒன்றியம்
தென்மாகாண தரப்படுத்தப்பட்ட அதிபர் சங்கம்
சுயாதீன தரப்படுத்தப்பட்ட அதிபர் ஒன்றியம்
மலையக ஆசிரியர் முன்னணி
ஆசிரியர் விடுதலை முன்னணி
இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம்
இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்
மலையக ஆசிரியர் சங்கம்
தேசிய ஆசிரியர் சபை
தேசிய தமிழர் ஆசிரியர் சங்கம்
இலங்கை தொழில் ரீதியான அதிபர்களின் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *