வெலிகம பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் உறுப்பினர் பிரசாத் மிலிந்த தனது தாய் மற்றும் தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார் என சிங்கள ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு, தாக்குதலில் காயமடைந்த பிரசாத் மிலிந்தவின் பெற்றோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக அமைச்சருக்கும் பெற்றோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்த நிலையில் அதில் ஒரு நெல் வயல் தன் பெயருக்கு பதிவு செய்யாததால் தாய் தந்தையை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அமைச்சரை கைது செய்ய மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.