மும்பை அணிக்கு 6 ஆவது தோல்வி: லக்னோ அணி 18 ஒட்டங்களினால் வெற்றி

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணி 18 ஒட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 199ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் லக்னோ அணி சார்பாக அணித்தலைவர் கே.எல். ராகுல் அட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 176 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 37 ஓட்டங்களையும் டெவால்ட் ப்ரீவிஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

குறித்த போட்டியில் பெற்ற வெற்றியுடன் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை அணி இறுதி இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *