அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

கோட்டாபய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு வித விதமான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதனால் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன பிரயோசனம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா கேள்ளி எழுப்பியுள்ளார் .

இன்று ( ஞாயிற்க்கிழமை ) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிங்கள மக்களால் சமாளிக்க முடியாதுள்ளது . 69 லட்சம் மக்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியையும் அவர்களது குடும்பத்தினரையும் இன்று வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்.

ஆனால் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட உயிராபத்தை தடுப்பதற்காக அப்போதிருந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ராஜினாமா செய்திருந்தால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. அனைவரும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒழித்து வாழ்ந்தார்கள். இதனால் மக்களை அழிக்க வாய்ப்பு ஏற்பட்டது என்றும் தெரிவித்தார் .

இதேவேளை அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். என்பதோடு சர்வதேச மத்தியஸ்தத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *