உத்தியோகப்பூர்வ விஜயமாக அமெரிக்கா சென்றார் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர், பன்னாட்டு நிதியத்தின் ஆலோசனைக் கூட்டம், உலக வங்கியின் உயர் நிலைக் கூட்டம், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நிலையிலான கூட்டம், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தென்கொரியா, இலங்கை, மற்றும் தென்னாப்பிரிக்கா, உட்பட பல்வேறு நாடுகளுடன் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *