புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு நாமல் வாழ்த்து.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இன்றைய அமைச்சரவை நியமனம் பெற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது முகப்புத்தக பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தருணத்தில் நாட்டுக்காக பங்காற்றுவதற்கு உங்கள் அனைவருக்கும் பெரும் பங்குள்ளது.
இறைவனின் அருளால் நீங்கள் அனைவரும் அப்பணிகளை நிறைவேற்ற பிரார்த்திக்கிறேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *