
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த நிதியாண்டில் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் குழு நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (Q4) அதன் முதல் இலாபத்தை பதிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.